ஜூனில் பெட்ரா பிராங்கா விசாரணை

ஜூனில் பெட்ரா பிராங்கா விசாரணை

1 mins read

பெட்ரா பிராங்கா தீர்ப்பை மறு பரீசிலனை செய்யுமாறு மலேசியா விடுத்த கோரிக்கையின் தொடர் பில் ஜூன் மாதம் பொது விசார ணை நடத்தப்படும் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத் துலக நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. பெட்ரா பிராங்கா தீவின் ஆட்சியுரிமை குறித்துச் சிங்கப் பூருக்கும் மலேசியாவுக்கும் இடை யில் பல ஆண்டுகாலமாகச் சர்ச்சை நீடித்து வருகிறது. "பெட்ரா பிராங்கா / பூலாவ் பத்துப் புத்தே மீதான ஆட்சியுரிமை வழக்கில் 23 மே 2008 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரி சீலனை செய்வது தொடர்பான வழக்குக்காகப் பொது விசாரணை நடத்தப்படும்," என அனைத்துலக நீதிமன்றம் தெரிவித்தது.

தி ஹேக் நகரில் அமைந் திருக்கும் அமைதி மாளிகையில் ஜூன் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்குப் பொது விசாரணை நடைபெறும் என்றும் அனைத்துலக நீதிமன்றத்தின் அறிக்கை தெரி வித்தது. பெட்ரா பிராங்கா ஆட்சியுரிமை வழக்கில் 2008ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு ஆட்சியுரிமை அளித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யு மாறு 2017 பிப்ரவரி மாதம் மலேசியா வழக்குத் தொடுத்தது. பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத் தில் புதிய ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும், தீவின் ஆட்சியுரிமையை மலேசியா கோருவதற்கு அவை ஆதாரமாக இருப்பதாகவும் மலேசியா கூறி வருகிறது.