ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்கள் சிலரின் 4ஜி வேகம், வினாடிக்கு ஒரு 'கிகாபைட்' வரை அதிகரிக்கவுள்ளது. நிறுவனத்தின் வரம்பில்லா வாரயிறுதி சேவைக்குப் பிந்தியக் கட்டணத் திட்டத்தில் உள்ளோர், நகர மையங்கள் போன்ற சில இடங்களில் அதிக விரைவான இணைய சேவையைப் பெறலாம். ஹுவாவெய் மேட் 10 ப்ரோ, ஹுவாவெய் P20, P20 ப்ரோ, சாம்சுங் கெலெக்சி, S9, S9 பிளஸ், சோனி எக்ஸ்பீரியா ஆகிய திறன்பேசிகளை பயன்படுத்துவோருக்குக் கூடுதல் வேகத்துடனான இணையச் சேவை கிடைக்கும். ஸ்டார்ஹப்பிற்குப் போட்டியாக சிங்டெல், எம்1 போன்ற நிறுவனங்களும் விரைவில் அத்தகைய சேவையை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஹப் '4ஜி' வேகம் சிங்கப்-பூரின் சில இடங்களில் அதிகரிக்கும்
1 mins read

