என்டர்பிரைஸ் சிங்கப்பூர்: 3 திட்டங்கள் அறிமுகம்

1 mins read

மனிதவள அமைச்சு, இதர அமைப் புகளுடன் இணைந்து என்டர் பிரைஸ் சிங்கப்பூர் மூன்று திட்டங் களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் இரண்டு திட்டங்கள் புதியவை. மனிதவள நடவடிக்கை களுக்கு வலுசேர்க்க ஏற்கெனவே நடைமுறையில் ஒரு திட்டம் மேம் படுத்தப்பட்டுள்ளது. மனிதவள நிபுணர்களுக்கான கல்விக் கழகத்தில் மனிதவள, உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ இதுகுறித்து நேற்று பேசினார். புதிய திட்டங்கள் மனிதவள நடவடிக்கைகளை மூன்று வழி களில் மேம்படுத்தும்.

சுய உதவி மனிதவள நடவடிக் கைகளுக்குத் தேவையான வளங் களைப் பெறும் வழிமுறைகளை மேம்படுத்துதல், மனிதவள நடவ டிக்கைகளை மேலும் நேர்த்தி யானதாக்க மனிதவளப் பகிர்வுச் சேவையை அதிகரித்தல், மனித வளம் தொடர்பில் மேலும் நல்ல முடிவுகளை எடுக்க தரவுகள், தொழில்நுட்பம் ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் புதிய திட்டங்கள் உதவும். வர்த்தகங்களுக்காக இணை யம் வழி சுய உதவி மனிதவள இணையவாசலை முதல் திட்டம் வழங்குகிறது. இதை என்டர் பிரைஸ் சிங்கப்பூர், என்டியுசி கற்றல் நடுவம், ஊழியர் மற்றும் மேம்பாட்டுக்கான சார்ட்டர்ட் கழகம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

இந்த இணையவாசல் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எளிதில் பயன்படுத்தக்கூடிய சுய உதவி மனிதவளம் தொடர்பான வளங்களை இது கொண்டிருக் கிறது. சிறந்த அணுகுமுறை களையும் பொதுவாக எதிர்கொள் ளப்படும் சவால்களுக்கான தீர்வு களையும் வழங்க இணையவாசல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திட்டம் மனித வளப் பகிர்வுச் சேவையை வழங்குகிறது.