சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் இரு போர்க்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்களுடன் சேர்ந்து தென்சீனக் கடலுக்கு அருகில் அனைத்துலக கடற்பகுதி யில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டன. பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் கலங்களை நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்துதல், ஆகாயத் தற்காப் புக்கு எதிரான தாக்குதல், ஹெலிகாப்டர் கப்பலில் இறங்குவதற் கான பயிற்சிகள் போன்றவை இடம்பெற்றன என்று சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
சிங்கப்பூர் கடற்படை அண்மைய ஆண்டுகளில் இது போன்ற பயிற்சிகளை இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாட்டுக் கடற்படைகளுடன் சேர்ந்து பயிற்சியை மேற்கொண் டுள்ளது. ஆக அண்மையில் நடந்த பயிற்சியில் சிங்கப்பூர் கடற்படை அரச ஆஸ்திரேலியக் கடற்படையுடன் மலாக்கா நீரிணையில் இதுபோன்ற பயிற்சியில் பங்கேற்றது. இந்தக் குறிப்பிட்ட பயிற்சி உட்பட பல்வேறு கடற்பயிற்சி களை சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவற்றின் கடற்படைகள் 1970ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றன.