சிங்கப்பூரில் இன்று பலராலும் பயன்படுத்தப்படும், கடைப்பிடிக்கப் படும் கலாசார மரபுடைமை பொருட் கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஐம்பதைத் தேசிய மரபுடைமைக் கழகம் அடையாளங்கண்டு அவற்றை ஒரு பட்டியலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஐம்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் கொண்ட அந்தப் பட்டியல் காலப்போக்கில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
கலாசார மரபுடைமைக்கான முன்மொழிவை 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல் கலாசார நிறுவனத்திடம் சமர்ப்பிப்பதற்கான முதற்படி இது என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நடந்த சிங்கப்பூர் மரபு டைமை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தெரிவித்தார். சிங்கப்பூரின் முதலாவது கலா சார, அரும்பொருளகப் பெருந்திட் டத்தில் இந்தப் பட்டியல் அங்கம் வகிக்கிறது. அந்த முயற்சிக்காக சுமார் 66 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள், சிங்கப்பூருக்கே உரியவையாகத் தனித்து நிற் கின்றன. அவற்றில் ஒன்று குசுத் தீவுக்கான யாத்திரை.
சுற்றுப்பயணிகள் பலரையும் பெரும்பாலும் சீனர்கள் பலரையும் ஈர்க்கும் குசு தீவு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

