டால்ஃபின் ஒன்று, பிடோக் படகுத் துறையில் நேற்றுக் காலை, மீன் தூண்டிலில் சிக்கியது. அந்தச் சம்பவத்தைக் காண சுமார் 70 பேர் திரண்டதாக லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது. காலை 7.30 மணிக்கு டால் ஃபின் சிக்கியிருந்ததைத் தூரத்தி லிருந்து கண்டதாகச் சம்பவத்தை நேரில் கண்ட திரு சியா என்பவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். "கடலை நான் பார்த்துக்கொண் டிருந்தபோது அங்கு ஏதோ மிதப் பதைக் கண்டேன்," என்றார் அந்த 55 வயது கட்டட வடிவமைப்பா ளர். "முதலில் அது ஒரு திருக்கை மீன் என்று நினைத்தேன். ஆனால் அது கரைக்கு அருகில் வரவர அது ஒரு டால்ஃபின் என்று தெரிய வந்தது. டால்ஃபி னின் வால் பகுதி மீன் தூண்டிலில் சிக்கிக்கொண்டிருந்தது," என்று திரு சியா கூறினார்.
சற்று நேரத்திற்குப் பிறகு, மீன வர் ஒருவர் தூண்டிலை அறுத்தார். டால்ஃபின் அந்த இடத்தைவிட்டு நீந்திச் சென்றது. டால்ஃபின் பலவீனமான நிலையில் இருப்பதுபோல் காணப் பட்டதாக திரு சியா தெரிவித்தார். சம்பவம் 15 நிமிடங்கள் நீடித் ததாகவும் டால்ஃபினின் உடலில் எந்தக் காயமும் தென்படவில்லை என்றும் டால்ஃபின் எந்த கூச்ச லும் போடவில்லை என்றும் அவர் சொன்னார். பிடோக் படகுத் துறையில் டால்ஃபின்களை இதுவரையில் தாம் கண்டதே இல்லை என்று திரு சியா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

