பாட்டாளிக் கட்சியின் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள்

பாட்டாளிக் கட்சியின் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள்

1 mins read

பாட்டாளிக் கட்சி 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அரச மைப்புச் சட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன என்று நேற்று தெரிவித்தார் கட்சியின் தலைவி சில்வியா லிம். கட்சியின் மத்திய செயற்குழுவில் பல்வேறு பிரிவினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதே அதில் முக்கியமான மாற்றம். "கட்சியின் உறுப்பினர்கள் பல இனங்களையும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர் களையும் பிரதிநிதிப்பவர்களாக இருக்கவேண்டும்" எனும் விதிக்குப் பதிலாக புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. "பல இனங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களைத் தேர்வு செய்வதில் பாட்டாளிக் கட்சி 'நியாயமான அளவில்' வெற்றி கண்டுள்ளது. தலைமைத்துவப் பதவிகளில் பெரும்பாலும் ஆண்களே இடம்பெற்று வருகின்றனர்.இன் னும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவ பதவி களுக்கு ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்று திருவாட்டி லிம் தெரிவித்தார்.