ஆளில்லா வாகனங்களைக் கண்காணித்தல், வானிலை மற்றும் மழையின் அளவு தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், தனிநபர் நட மாட்டக் கருவியில் வேகமாகச் செல்வோரைக் கண்டுபிடித்தல், அவர்களின் முகங்களை அடை யாளம் காணுதல் என பல பணிகளையும் ஒருங்கே செயல் படுத்தக்கூடிய விவேக விளக் குக் கம்பங்கள் விரைவில் தீவெங்கும் பொருத்தப்பட உள் ளன.
இத்தகைய தகவல்களைக் கொண்டு அரசாங்க அமைப்பு கள் சூழ்நிலைகள் தொடர்பான புரிந்துணர்வை அதிகரிக்கும் அதேவேளையில், கட்டுக்கடங் காத கூட்ட நெரிசல், ரயில் சேவைத் தடைகள், போக்கு வரத்து நெரிசல் போன்ற உத்தேச பிரச்சினைகளை உட னடியாகக் கண்டறிந்து அவற் றுக்குத் தீர்வு காண முடியும். இந்தத் திட்டம் தொடர்பான விவரங்களை 'கஃவ்டெக்' எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு கடந்த வாரம் நடை பெற்ற ஒரு தனிப்பட்ட கூட்டத் தில் ஆர்வமுள்ள குத்தகையா ளர்களிடம் தெரிவித்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

