ஜோகூரில் தளம் கொண்ட போதைப் பொருள் கும்பல் சிக்கியது

ஜோகூரில் தளம் கொண்ட போதைப் பொருள் கும்பல் சிக்கியது

1 mins read

சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றின் சட்ட அமலாக்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையால் ஜோகூரில் தளம் கொண்டிருந்த கும்பல் ஒன்று பிடிப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் மலேசியாவின் அரச மலேசிய போலிசும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப் பட்டதுடன் மொத்தம் 14.4 கிலோ கிராம் போதைப் பொரு ளும் கைப்பற்றப்பட்டது.

"சிங்கப்பூருக்கு கணிசமான அளவில் போதைப் பொருளை விநியோகித்து வந்த கும்பலை முறியடித்ததுடன் சிங்கப்பூர் சாலைகளில் விற்கப்படவிருந்த பெரிய அளவி லான போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளோம்," என்று கூறினார் சிஎன்பி-யின் இயக்குநர் இங் செர் போங். கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் அறுவர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் மலேசிய போலிசார் ஜோகூரில் மேற்கொண்ட நடவடிக் கையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். "போதைப் பொருளுக்கு எதிரான போரில் எந்த ஒரு அமைப்பும் தனித்து செயல்பட முடியாது. சம்பந்தப்பட்ட நாடு களின் அமலாக்க அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மூலமே இது சாத்தியமாகும் என்றும் திரு இங் சொன்னார்.