'வலுவான அடித்தளத்தில் சிங்கப்பூர்-சீன உறவு'

'வலுவான அடித்தளத்தில் சிங்கப்பூர்-சீன உறவு'

1 mins read

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பெய்ஜிங்கில் சந்தித்த பிறகு தெரிவித்து உள்ளார். சீனப் பெருந்தலைவர் டெங் சியாவ்பிங் 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு வருகை மேற் கொண்ட பிறகு, இரு நாடுகளின் உறவு பன்மடங்கு பெருகியதுடன் அவை இணைந்து பணியாற்ற பல் வேறு வாய்ப்புகள் கிட்டின என்று டாக்டர் விவியன் கூறினார். "அதன் மூலம் ஒன்று மற்றொன் றிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் அதன் வளர்ச்சியில் சிறந்த முறை யில் ஒத்துழைத்து வந்துள்ளன," என்றும் திரு விவியன் சொன்னார்.

இந்தக் கருத்தை ஆமோதித்த திரு வாங், "ஆறு மாதங்களுக்குள் சிங்கப்பூர் பிரதமர் லீ சீனாவுக்கு இரண்டாவது முறையாக வருகைய ளித்திருப்பது இரு நாடுகளுக்கும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நிலவும் நட்பார்ந்த உற வைப் பிரதிபலிக்கிறது," என்றார். பிரதமர் லீ ஐந்து நாள் வருகை மேற்கொண்டு நேற்று சீனா சென்றடைந்தார். ஆசியான் அமைப்பின் தலைவராக சிங்கப்பூர் பொறுப்பேற்றிருப்பதை வரவேற்ற திரு வாங், அதன் மூலம் சிங்கப்பூர் ஆற்றிவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பைப் பாராட்டினார். ஆசியான்-சீனா கலந்துரையாடலுக்கு 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சிங்கப்பூர் ஒருங்கி ணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளது.