நேப்பாள பிரதமரை வரவேற்ற நரேந்திர மோடி

நேப்பாள பிரதமரை வரவேற்ற நரேந்திர மோடி

1 mins read
84887714-a0b6-45c8-88b8-cb7527bc0e50
-

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா சென்ற நேப்பாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அவரது மனைவி ராதிகா சகாய ஒலி இருவரையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். காட்மண்டுவில் இருந்து இந்தியாவிற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கு இரு நாடும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் நேப்பாள பிரதமர் கூறினார். இதற்கிடையே, நேப்பாள பிரதமரைக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் சந்தித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்