மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது

1 mins read
eb8939cb-650f-4912-a4ce-827c20c364a0
-

ரயில் தடத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நேற்றுக் காலை கிழக்கு-மேற்கு பாதையில் ரயில் சேவைகள் தாமதமடைந்தன. சேவைத் தாமதம் மூன்று மணி நேரத் துக்கு மேல் நீடித்ததாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 10.18 மணி யளவில் அனைத்து ரயில் சேவை களும் வழக்கநிலைக்குத் திரும் பின.

ரயில் தடத்தில் கோளாறு ஏற் பட்டதால் ஜூரோங் ஈஸ்ட் முதல் ஜூ கூன் வரையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாலை 7.36 மணியளவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இதன் காரணமாக பயண நேரத்தில் கூடுதலாக 15 நிமிடங் கள் ஒதுக்கும்படி அது பயணி களைக் கேட்டுக் கொண்டது. இதற்கு அடுத்து வெளியிடப் பட்ட அறிவிப்பில் கிளமெண்டி நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளதால் 25 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்படலாம் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. "சேவையை சீர் செய்ய முயற்சி செய்துவருகிறோம்," என்றும் அது குறிப்பிட்டது.

ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள். ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜூரோங் ஈஸ்ட், ஜூ கூன் ஆகியவற்றுக்கு இடையே ரயில் சேவை 25 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. மூன்று மணி நேரத்துக்கு மேல் ரயில் சேவை தாமதம் நீடித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்