தாராளமயப்படுத்தவும் பலதரப்பு வர்த் தக முறையைச் சீர்தூக்கி நிலைநிறுத்த வும் சீனா மேற்கொள்ளும் முயற்சிக ளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார். சீனத் தலைநகர் பெய் ஜிங்கில் சீனத் துணை அதிபர் வாங் சிஷானைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். சீனாவின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதேவேளையில், சீனா உட் பட உலகமே குறிப்பிடத்தக்க மாற்றத் திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், சீனா தொடர்ந்து தாராளமயமாகி, பலதரப்பு வர்த்தக முறையைச் சீர்தூக்கி நிலைநிறுத்தி, வட்டார மற் றும் உலக வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பங்களிக்கும் எனவும் பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்தார் என பிரதமர் அலு வலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அமெரிக்காவில் தன்னைப்பேணித்தனம் அதிகரித்துவரும் வேளையில் பிரதமர் லீ இவ்வாறு கருத்துரைத்திருக்கிறார். சீனாவின் இறக்குமதிகளுக்குத் தீர்வை விதிக்கப்போவதாக அமெரிக்கா அண்மை வாரங்களில் மிரட்டி வந்தது. இதனால், சீனாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் வர்த்தகப் போர் மூளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 'பீப்பல்ஸ் டெய்லி' செய்தித்தாள் பிரதமர் லீயுடன் நடத்திய பேட்டியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தது. வர்த்தகப் போர் பலதரப்பு வர்த்தக முறையைக் கடுமை யாகக் கீழறுக்கும் என்று பிரதமர் லீ பேட்டியில் கூறியதாகச் செய்தித்தாள் கூறியது. பிரதமர் லீ ஐந்து நாள் பயணம் மேற் கொண்டு ஞாயிற்றுக் கிழமை சீனாவைச் சென்றடைந்தார். அவர் ஜொங்னன்ஹாய் தலைமைத்துவ வளாகத்தில் அமைந் துள்ள ஜிகுவாங் கீ எனும் ஊதா ஒளி மண்டபத்தில் திரு வாங்கைச் சந்தித் தார்.
சீன துணை அதிபர் வாங் சிஷானை பிரதமர் லீ சியன் லூங் நேற்று சந்தித்தார். படம்: ஏஎஃப்பி

