கள்ள சிகரெட்டுகளை புகைத்தவர்கள் சிக்கினர்

1 mins read

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை களில் கள்ள சிகரெட்டுகளைப் புகைத்த 25 பேர் பிடிபட் டார்கள். கள்ள சிகரெட்டுகளைப் புழங்குவோரைத் தேடி மத்திய வர்த்தக வட்டாரத்தில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் நடவடிக்கை மேற்கொண்டனர். கள்ள சிகரெட்டுகளுக்கான தேவையை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் இத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கள்ள சிகரெட்டுகளில் தீர்வை செலுத்தப்பட்டதற்கான அடையாளம் இருக்காது. அத்தகைய சிகரெட்டுகளைப் புகைத்து பிடிபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்று சிங்கப்பூர் சுங்கத்துறை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. தீர்வை செலுத்தப்படாத ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை ஒருவர் வைத்திருந்தால், அவர் முதல் தடவையாக குற்றம் செய்திருந்தால் $500 அபராதம் விதிக்கப்படும். இந்த அளவைவிட அதிகமாக ஒருவரிடம் கள்ள சிகரெட் இருந்தால், அவர் மீண்டும் குற்றம் செய்திருந்தால் அதிக அபராதத்தைச் செலுத்தவேண்டிவரும்.