ஆற்றல்: ஆசிய பசிபிக்கில் சிங்கப்பூர் மீண்டும்முதலிடம்

ஆற்றல்: ஆசிய பசிபிக்கில் சிங்கப்பூர் மீண்டும்முதலிடம்

1 mins read

ஆற்றல் வாய்ந்தவர்களைக் கவர்ந்து ஈர்ப்பதிலும் ஆற்றலை வளர்த்து மேம்படுத்துவதிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது தடவை யாக சிங்கப்பூர் ஆசிய பசிபிக்கில் முதல் இடத்தில் உள்ளது குறிப் பிடத்தக்கது. உலகளவில் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது. இன்ஸீட் என்ற வர்த்தகப் பள்ளி தொகுத்த ஓர் அட்டவணை மூலம் இது தெரிய வருகிறது. ஆற்றல் வாய்ந்தவர்களை ஈர்த்து ஆற்றலை மேம்படுத்தி அவர்களைத் தக்கவைத்துக்கொள் வதில் 119 நாடுகள் ஒப்பிடப்பட்டன.

இந்த ஒப்பீட்டின் முடிவு 'உலக ஆற்றல் போட்டித்திறன் அட்ட வணை 2018' என்ற அட்டவணை யில் இடம்பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியா (11), நியூ சிலாந்து (12), ஜப்பான் (20), மலே சியா (27), தென்கொரியா (30) ஆகியவை இதில் முன்னணியில் நிற்கும் ஆசிய பசிபிக் வட்டாரத் தின் முதல் 30 நாடுகளில் அடங்கி இருக்கின்றன. உலகளவில் பார்க்கையில் ஐரோப்பிய நாடுகளே ஆற்றல் போட்டித்திறனில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் அமெ ரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. உலகளவில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருக்கும் ஐரோப்பா அல்லாத ஒரே நாடு சிங்கப்பூர்தான். 'போட்டித்திறனுக்கான பன்மயம்' என்ற கருப்பொருளுடன் கூடிய அந்த அட்டவணை, இரண்டு வித மான பன்மயத்தைப் பரிசோதிக்கிறது.