சிங்கப்பூரில் 32வது ஆசியான் உச்சநிலை மாநாடு இந்த மாதம் நடக்கவிருக்கிறது. ஏப்ரல் 27ஆம் தேதி இஸ்தானாவிலும் ஏப்ரல் 28ஆம் தேதி ஷங்கிரிலா ஹோட்டலிலும் அந்த மாநாடு நடக்கவிருப்பதால் அந்தப் பகுதி களில் கடும் பாதுகாப்பு நடப்பில் இருக்கும்.
உச்சமாநாடு, பொது ஒழுங் குச் சட்டத்தின் கீழ் மேம்படுத் தப்பட்ட பாதுகாப்புக்கு உரிய சிறப்பு நிகழ்ச்சியாகப் பிரகடனப் படுத்தப்பட்டு இருக்கிறது என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. மாநாடு நடக்கும் இடங் களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அந்த இரு நாட்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடப்பில் இருக்கும்.
பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் போலி சார் சோதனை நடத்துவார்கள். ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலான தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவரிடமாவது இருந் தால் அவர்களுக்கு $20,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறை அல்லது இரண்டும் தண் டனையாக விதிக்கப்படும்.

