தெம்பனிசில் இருக்கும் காப்பி கடை ஒன்றில் கன்னமிட்டு நுழைந்து $400 பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டதன் பேரில் பதின்ம வயதினர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 16 மற்றும் 17. தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் இருக்கும் ஒரு காப்பி கடையில் இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடப்பட்ட சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தத் திருட்டு பற்றி புகார் வந்ததையடுத்து போலிஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். போலிஸ் படச் சாதனங்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். 17 வயது நபர், அங் மோ கியோ அவென்யூ 1ல் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். மற்றொருவர் சீமெய் அவென்யூவில் திங்கட்கிழமை கைதானார். இரவு நேரத்தில் கன்னமிட்டு திருடிய குற்றவாளிக்கு 14 ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.
காப்பி கடையில் கன்னமிட்டு திருட்டு; பதின்ம வயதினர் இருவர் கைது
1 mins read

