உடல் நலத்திற்கு உகந்த வகையில் சுவை பானங்கள் மாறுகின்றன

உடல் நலத்திற்கு உகந்த வகையில் சுவை பானங்கள் மாறுகின்றன

fallback

11 Apr 2018 - 6:00 am

1 mins read

சிங்கப்பூரில் இனிப்பு பானங்கள் மக்களிடையே சுவை குறைந்து வருகின்றன. உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தும் சிங்கப்பூரர்கள், இனிப்பு பானங்களை வாங்கி பருகுவதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். விற்பனை குறைவதால் இத்தகைய இனிப்பு பான நிறுவனங்கள் பழைய சுவைகளுக்குப் பதிலாக புதுப்புது சுவைகளில் பானத்தை அறிமுகப்படுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றன. செயற்கை இனிப்புச் சுவை சேர்க்கும் பானங்களில் இனிப்பு குறைவாக இருக்கின்ற பானம் முதல் அறவே இனிப்பு இல்லாதவை வரை எல்லாவற்றிலும் சுவையையும் தயாரிப்பு முறையையும் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

சுவை பான விற்பனை குறைந்துவிட்டதாக இந்தத் தொழில்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். சுகாதார அமைச்சு 2016ல் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தை அறிவித்தது. அது முதல் இத்தகைய பானங்களின் விற்பனை குறைந்து போயிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு உடல் நலத்துக்கு உகந்த பானங்களைத் தயாரிப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.