பிரிட்டனில் ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக இருந்துவரும் டாக்டர் லியுக் ஓங், 31, என்ற சிங்கப்பூரரான ஒரு மருத்துவர், தனது விசாவை புதுப்பிப்பதற்கு மூன்று வார காலம் தாமதமாக மனு செய்ததன் காரணத்தினால் பிரிட்டனைவிட்டு வெளியேற்றப் படக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கி இருக்கிறார். டாக்டர் லியுக் ஓங், மான்செஸ் டர் பல்கலைக்கழகத்தில் மருத் துவம் படிப்பதற்காக 2007ல் பிரிட்டனுக்கு சென்றார்.
2012ல் படிப்பை முடித்து 2017 ஆகஸ்ட் வரை தனது மாணவர் விசாவை அவர் புதுப்பித்தார். ஆனால் 2017 செப்டம்பரில் அவர் தனது பயிற்சியை முடிக்க ஐந்து மாத காலம் எஞ்சியிருந்த போது லண்டனில் தொடர்ந்து இருக்க செய்த விண்ணப்பத்தை பிரிட்டனின் உள்துறை அலுவல கம் நிராகரித்துவிட்டது என்று டாக்டர் ஓங் கூறியதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
டாக்டர் லியுக் ஓங். படம்: CHANGE.ORG

