தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெற்றோர் பிள்ளைகளாகி மகிழ்ந்தனர்;

1 mins read
4e2cdf6b-c3db-411b-b5f9-461d4bc8604a
-

'ஆடு, பாடு விளையாட்டில்' உற்சாகம் 'படி! எழுது!!' என்று பிள்ளைகளை வேலைவாங்கிய பெற்றோரைக் குழந்தைப்பருவத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றது கல்சா பாலர்பள்ளியின் ஏற்பாட்டில் நடை பெற்ற 'ஆடு, பாடு, விளையாடு' எனும் பயிலரங்கு. பாடம் கற்பதை விளையாட்டாக மாற்றும் வித்தையை கல்சா பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆனந்தவள்ளி கணேசன், கேசவன் பிந்து, நித்திய சுந்தரி, அனிதா சுகுமாறன் ஆகியோர் பயிலரங்கில் கலந்துகொண்ட பெற்றோருக்கும் கற்றுத்தந்தனர்.

சில நிமிடங்கள்கூட ஓரிடத்தில் அமர்ந்திருக்க விரும்பாத பாலர் களுக்குப் பிடித்த முறையில் பாடம் கற்பிப்பது உகந்தது என்ற எண் ணத்தில், தாங்கள் கற்பிக்கும் பாடக் கருவை ஒட்டிய எளிமை யான, இனிமையான தமிழ்ப் பாடல் களை உருவாக்குவதுடன் சிறுசிறு மாற்றங்களுடன் பாரம்பரிய விளை யாட்டுகளையும் ஆசிரியர்கள் அறி முகப்படுத்துகின்றனர்.

அத்தகைய பாடல்களுக்குப் பிள்ளைகளிடம் பலத்த வரவேற்பு இருப்பதை அறிந்து பாடல், ஆடல், விளையாட்டு மூலம் பாடம் நடத் தப்படுகிறது. ஒரு நாளில் சில மணி நேரம் மட்டுமே பள்ளியில் இருக்கும் பிள்ளைகள் தமிழைக் கற்றுக் கொள்ளும் வேகத்தைப் பார்த்து வியந்த ஆசிரியர்கள், வீட்டிலும் இது போன்ற சூழலை ஏற்படுத் தினால் அவர்கள் கற்றுக்கொள் ளும் வேகம் அதிகரிக்கும் என் பதை உணர்ந்தனர்.

கல்சா பாலர்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட 'சடுகுடு' விளையாட்டில் ஈடுபட்ட பெற்றோருடன் ஆசிரியர்கள் (இடமிருந்து) ஆனந்தவள்ளி, நித்தியா. படம்: கல்சா பாலர்பள்ளி