எஸ்பிஎச் நிகர லாபம் $100.6 மில்லியன்

எஸ்பிஎச் நிகர லாபம் $100.6 மில்லியன்

1 mins read

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இவ்வாண்டு முற்பாதியின் நிகர லாபம் $100.6 மில்லியன் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க $1.4 மில்லியன் அல்லது 1.4 விழுக்காடு அதிகம் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. குழுமத்தின் இவ்வாண்டு முற்பாதிக்கான வருமானம் $492.5 மில்லியன் என்றும் இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்புநோக்க $23.8 மில்லியன் அல்லது 4.6 விழுக் காடு குறைவு. ஊடக வர்த்தகத்தின் வருமா னம் $40.4 மில்லியன் குறைந்து $329.5 மில்லியன் ஆனது. சொத்துத்துறையின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் $127.7 மில்லியன் என்று நிலையாக இருந்தது. இதர வர்த்தகங்களின் வருமா னம் $17.3 மில்லியன் அதிக ரித்து $41.3 மில்லியன் ஆனது.