மிளகாய் சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி

மிளகாய் சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read

நியூயார்க்: உலகிலேயே மிகவும் உறைப்பான மிளகாயைச் சாப்பிட்டவருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'கரோலினா ரீப்பர்' உலகின் மிகவும் உறைப்புமிக்க மிளகாய் என்று உலக கின்னஸ் சாதனை கூறுகிறது. உணவுப் போட்டியில் பங்கேற்று இந்த மிளகாயைச் சாப்பிட்ட 34 வயது ஆடவருக்கு கழுத்து, தலையில் வலி ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. இதனால் நியூயார்க்கில் உள்ள பாசெட் மருத்துவ நிலையத்தில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.