சுவீடனின் முன்னைய தற்காப்பு ஆலோசகருக்கு சிங்கப்பூர் விருது

சுவீடனின் முன்னைய தற்காப்பு ஆலோசகருக்கு சிங்கப்பூர் விருது

1 mins read

சுவீடனின் தற்காப்பு அமைச்சருக்கு முன்னைய சிறப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பீட்டர் பாகருக்கு சிங்கப்பூர் தற்காப்பு ஆய்வாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கும் சுவீடனுக்கும் இடையில் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திய தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தற்காப்பு அமைச்சில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், திரு பாகருக்கு அந்த விருதை வழங்கிக் கௌரவித்தார்.

தற்காப்புத் துறையில் நிலவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இருநாட்டு உறவுகளில் முக்கிய தூணாக விளங்குவதாக டாக்டர் இங் தெரிவித்தார். -2013 பிப்ரவரி முதல் 2016 ஜூன் வரை, திரு பாகர், சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றியபோது சிங்கப்பூர் கடற்படையின் 'நேவி சேலஞ்சர்', 'ஆர்ச்சர்' தர நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு, நிபுணத்துவத் திறன் பகிர்வு ஆகியவற்றுக்கு அவர் வழி கோலினார்-.