வாகன சோதனைக் கட்டணம் உயர்வு

வாகன சோதனைக் கட்டணம் உயர்வு

1 mins read

இந்த மாதம் முதல் தேதியிலிருந்து வாகன சோதனைக் கட்டணம் 10% உயர்ந்துள்ளது. கடந்த 2014 முதல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் "High Idle Emission Test" எனப்படும் கரியமல புகைச் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால் ஆண்டு சோதனைக் கட்டணமான $64.20 உடன் இந்தச் சோதனைக்கான $6.42 கட்டணமும் சேர்க்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட கார்களில் எரிக்கப்படாத எண்ணெய் அல்லது ஹைட்ரோகார்பன் அளவு சோதிக்கப்படும்.

இந்த ஹைட்ரோகார்பன் அளவு கூடுதலாக இருந்தால் கார் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கருதப்படும். இந்தச் சோதனைக்கு $1.07 செலவாகும். 2003ஆம் ஆண்டு, ஜூலை 1 தேதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால் மோட்டார்சைக்கிளுக்கான சோதனைக் கட்டணமும் 5.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.