கொன்டோமினியம், தனியார் அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றின் மறுவிற்பனை விலைகள் முன்பில்லாத அளவில் கடந்த மாதம் உயர்ந்திருக்கிறது. 'எஸ்ஆர்எக்ஸ் பிரோப்பர்ட்டி' என்ற சொத்துச் சந்தை இணையத்தளத்தின் புள்ளிவிவரங்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றன. தரை வீடுகள் அல்லாத தனியார் வீட்டு விலை, பிப்ரவரி மாதத்துடன் ஒப்புநோக்க, 1.5% உயர்ந்தது. பிப்ரவரியில் ஏற்பட்ட விலை மாற்றம், முன்னைய கணிப்பான 1.5 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாகத் திருத்தப்பட்டது. தீவு முழுவும் வீட்டு விலை ஏற்றம் கண்டது. மத்திய வட்டாரத்தின் மையப்பகுதியின் வீட்டு விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அவற்றின் விலை 2.2 % அதிகரித்தது. கடந்த ஆண்டிலிருந்து, விலை 8 % கூடியுள்ளது-. வட்டாரத்தின் மத்திய பகுதியில் வீட்டு விலை, பிப்ரவரி மாதத்திலிருந்து 1.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியிலிருந்து அந்த உயர்வு 11.4 ஆக உள்ளது. மத்திய வட்டாரத்திற்கு வெளியே இருக்கும் தரை வீடுகள் அல்லாத தனியார் வீட்டு விலை பிப்ரவரியுடன் ஒப்புநோக்க1.3 விழுக்காடு உயர்ந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, வீட்டு விலை ஏழு விழுக்காடு உயர்ந்தது.

