வரும் திங்கட்கிழமை முதல் சிங் கப்பூர் போலிஸ் அதிகாரிகளின் சீருடையின் தரம் மேம்பாடு காண் கிறது. சீருடையின் நிறத்தில் மாற்றமில்லை. வெப்பத்தையும் குளிரையும் சிறப்பான முறையில் தாங்கும் விதத்தில் துணியின் தரம் அமைந்திருக்கும். அதாவது, 98 விழுக்காடு பாலி யெஸ்டர், 2 விழுக்காடு ஸ்பான் டெக்ஸ் கலந்திருப்பதால் விரை வில் உலரும் தன்மை கொண்டதாக வும் வியர்வையை எளிதில் உறிஞ் சும் வகையிலும் சீருடை இருக்கும். தற்போதைய சீருடையில் இருக் கும் உலோகப் பொத்தான்க ளு க்குப் பதில் பிளாஸ்டிக் பொத்தான் கள் மறைவாக இருக்கும். சீரு டைக்கு மேல் தேவைப்படும் அம் சங்களை எளிதாகப் பொருத்த அந்தப் பொத்தான்கள் உதவும்.
மேலும் சீருடையின் வலது மார்புப் பகுதியில் வேலைப்பாடுகளு டனான POLICE என்ற வார்த்தை புதிதாக இடம் பெறுகிறது. சிறந்த சுவாசத்திறன், சௌகரியம், இலகு ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு புதிய சீருடை வடிவமைக் கப்பட்டுள்ளது. துணியின் தரம், வடிவம் ஆகி யன அறிவியல், தொழில்நுட்ப தலைமை அதிகாரியுடன் உள்துறை அமைச்சு நடத்திய ஆலோசனை களில் முடிவு செய்யப்பட்டன. சீருடையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் நமது போலிஸ் அதி காரிகள் அதிக ஆற்றலுடனும் வசதியுடனும் செயல்பட உதவும் என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் போலிஸ் சீருடை சீரமைக்கப்படுகிறது. இப்போதுள்ள சீருடை முழுக்க முழுக்க பாலியெஸ்டர் துணியால் செய்யப்பட்டது. புதிய சீருடை நடப்புக்கு வந்ததும் இப்போதைய சீருடை போலிஸ் படையிடம் ஒப் படைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப் படும்.
புதிய சீருடையின் வலது மார்புப் பகுதியில் POLICE என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படம்: திமத்தி டேவிட்

