லஞ்ச குற்றச்சாட்டுகளை மறுக்கும் நகரமன்ற பொது மேலாளர்

லஞ்ச குற்றச்சாட்டுகளை மறுக்கும் நகரமன்ற பொது மேலாளர்

1 mins read
5d584eb9-2f56-449e-8aeb-e5bd0def8e08
-

அங் மோ கியோ நகர மன்றத்தின் முன்னாள் பொதுமேலாளர் தம் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை மறுத்ததைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வோங் சீ மெங், 58, என்றும் விக்டர் வோங் (படம்) என்றும் அழைக்கப்படும் அவர் இருவரி டமிருந்து லஞ்சம் பெற்ற 55 குற்றச்சாட்டு களை எதிர்நோக்கு கிறார். சியா சின் லான், யிப் ஃபோங் யின் ஆகிய இருவர் அவர்கள். அங் மோ கியோ நகர மன் றத்தின் செயலாளராவும் பொது மேலாளராகவும் இருந்தபோது வோங் லஞ்ச ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டது. இவ்வழக்கில் அவரும் சியாவும் தலா $100,000 பிணை யில் வெளியில் உள்ளனர்.

வழக்கிற்கு முந்திய கலந்து ரையாடல் கூட்டம் மே 3ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. சியா, யிப் ஆகிய இருவர் சார்ந்த நிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்காக நகர மன்றத்தைப் பயன்படுத்தியதற்குக் கைமாறாக அவர்களிடமிருந்து வோங் $107,000 லஞ்சம் பெற்றதாக அரசு நீதிமன்றங்களின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 டிசம்பருக்கும் 2016 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது. வோங்கிற்கு லஞ்சம் தர முன்வந்த 54 குற்றச்சாட்டுகளை சியா, 62, எதிர்நோக்குகிறார்.