2017ல் ஆகக் குறைவான லஞ்ச ஊழல் வழக்குகள்

2 mins read

கடந்தாண்டு விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்ட லஞ்ச ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை இது வரை இல்லாத ஆகக் குறைந்த அளவாக 103க்கு சரிந்துவிட்டதாக ஊழல் விவகாரங்கள் புலன் விசா ரணைப் பிரிவு (சிபிஐபி) தெரி வித்துள்ளது. இந்த எண்ணிக்கை இந்தப் பிரிவுக்கு வந்த 778 புகார்களில் ஒரு பகுதி. சிபிஐபிக்குத் தெரிவிக்கப் படும் அனைத்துப் புகார்களும் புகார் மதிப்பீட்டுக் குழுவால் பரி சீலிக்கப்படும். உரிய முகாந்திரம் இருப்பின் அந்தப் புகார் விசா ரணைக்கு ஏற்கப்பட்டு பதிவு செய்யப்படும். தெரிவிக்கப்பட்ட புகார்களில் பெரும்பாலானவற்றில் போதுமான ஆதாரங்களும் தெளிவும் இல்லை என்று சிபிஐபி நேற்று வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவர அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் தெரிவிக்கப்பட்ட புகார்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை ஊழல் தொடர்பில்லாதவை என் றும் அவற்றின் மீதான நடவடிக் கைக்கு இதர அரசாங்க அமைப்பு களிடம் சிபிஐபி பரிந்துரைத்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெறப்பட்ட 778 புகார்களில் 410 புகார்கள் அல்லது மொத்தப் புகார்களில் 53 விழுக்காடு ஊழல் தொடர்பற்ற தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விகிதம் 2016ஆம் ஆண்டில் 45 விழுக்காடாகவும் அதற்கு முந் திய ஆண்டில் 46 விழுக்காடாக வும் இருந்தன.

கடந்த 2016ஆம் ஆண்டில் மொத்தம் 880- புகார்கள் வரப் பெற்றன. அவற்றில் 118 புகார்கள் விசாரணைக்காகப் பதிவு செய் யப்பட்டன. கடந்த ஐந்தாண்டு களில் ஆகக் குறைவான புகார் கள் 2014ஆம் ஆண்டில் பெறப்பட் டன. மொத்தம் 736 லஞ்ச ஊழல் புகார்கள் அப்போது பெறப்பட்டன. மொத்த லஞ்ச ஊழல் புகார் களில் தனியார் துறை சம்பந்தப் பட்டவை பெரும்பான்மையாக உள் ளன. மொத்த புகார்களில் அத் துறை சார்ந்தவை 92 விழுக்காடு.

கடந்த நான்காண்டுகளில் லஞ்சம் ஊழல் தொடர்பில் கட்டு மானம், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், பண்டக சாலை, போக்குவரத்து, தளவாடச் சேவைகள் ஆகியன கவலைக் குரியவையாகக் காணப்பட்டன. சிபிஐபி கையாண்ட லஞ்ச ஊழல் வழக்குகளில் சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்ட கெப்பல் கார்ப் நிறுவனத்தின் கடற்துறைப் பிரிவு தொடர்பானது அதிக முக்கியத் துவம் வாய்ந்த வெளிநாட்டு மோசடியாகக் கருதப்பட்டது.