கணவருடன் சேர்ந்து ஆடவரை தாக்கிய பெண்ணுக்கு சிறை

1 mins read

கணவனும் மனைவியும் சேர்ந்து ஆடவர் ஒருவரைத் தாக்கிய குற்றத்தில் 36 வயது மனைவிக்கு நேற்று நீதிமன்றத்தில் இரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லென்னி சுரியானா யூசோஃப் அலி என்னும் அந்தப் பெண் கடந்த 2014 டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை அந்தக் குற்றத் தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் தமது கணவர் அஸ்லான் முகமது ராம்லீ, 32, என்பவருடன் சேர்ந்து முகமது நூரிஷாம் முகமது சலிம், 30, என்பவரைத் தாக்கினார். தாக்கப் பட்டவரின் வீட்டில் அன்று அதிகாலை 3.35 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

தமது பத்தாண்டு கால நண்பரான நூரிஷாம் தமக்குப் பணம் தரவேண்டும் என அஸ்லாம் தமது மனைவியிடம் பொய் கூறியதாகவும் அது பொய் என்று தெரியாமல் அந்தப் பெண் தமது கணவருடன் நூரிஷாம் வீட்டுக்குச் சென்று விசாரித்த தாகவும் கூறப்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் நூரிஷாமை கணவரும் மனைவியும் தாக்கினர்.

குறிப்பாக மனைவியான லென்னி தமது மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்தால் நூரிஷாமின் தலையில் பலமுறை தாக்கியதாகவும் அவரது முதுகில் கத்திரிக்கோலால் குத்தியதாகவும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்தை லென்னி ஒப்புக்கொண்டார். அவரது கணவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தண்டிக்கப்பட்டார். ஓராண்டு, மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.