பீஷான் விபத்தில் காயமுற்றவர் மரணம்

பீஷான் விபத்தில் காயமுற்றவர் மரணம்

1 mins read

பீஷானில் சிற்றுந்துடன் கார் மோதிய விபத்தில் காயமுற்ற 20 வயது ஆடவர் மருத்துவமனையில் மாண்டார். செவ்வாய்க் கிழமை காலை 6.45 மணியளவில் பீஷான் ரோடு=பீஷான் ஸ்திரீட் 11 போக்குவரத்து சந்திப்பில் அவ்விபத்து நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். காரில் இருந்த அந்த ஆடவரும் 65 வயது ஓட்டுநரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிற்றுந்தின் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். விபத்தின்போது அப் பேருந்தில் பயணிகள் யாருமில்லை. சிகிச்சையிலிருந்த இளைய ஆடவர் பின்னர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.