கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆண்களுக்கான ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை அது 4=3 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு குழுக்களும் மாறி மாறி கோல் போட்டன. இந்தியா இருமுறை முன்னிலை வகித்தது. இருமுறையும் இங்கிலாந்து ஆட்டத்தைச் சமன் செய்தது. நான்கு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது இங்கிலாந்து கோல் போட்டு முன்னிலை வகித்தது. இரண்டு நிமிடங்கள் கழித்து, இந்தியா ஆட்டத்தைச் சமன் செய்தது. ஆட்டம் முடிய சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது இந்தியா அதன் வெற்றி கோலைப் போட்டது.
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
1 mins read


