சிங்கப்பூரின் அடுத்த பிரதமரா வதற்கு யார் அதிக தகுதி உள்ளவர் என்பதைக் கண்டு பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒன்றிணைந்து செயல் படக்கூடிய இளம் அமைச்சர் குழுவைக் கண்டுபிடிப்பதும் மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவராவதற்குப் பல்வேறு குணநலன்கள் அவசியம் என்று குறிப்பிட்ட திரு லீ, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒருவரைக் கண்டுபிடிப்பது சாத்தியமன்று என்று கூறினார். இளம் அமைச்சர் குழுவில் இடம்பெறுவோருக்கு இத்தகைய குணநலன்கள் போதுமான அளவில் இருந்து அவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்து சிங்கப்பூருக்குத் தலைமை தாங்குவது அவசியம் என்றார் திரு லீ.
சீனாவுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற் கொண்ட திரு லீ, ஷங்ஹாய் நகரில் நடைபெற்ற கலந்துரை யாடலில் இந்தக் கருத்துகளை நேற்று முன்வைத்தார். சிங்கப்பூரின் அடுத்த பிரத மரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2022ஆம் ஆண்டுக்குள் தாம் பதவி விலகத் திட்டமிட்டிருப்ப தாகவும் திரு லீ கூறினார். இதுவரை இளம் அமைச்சர்கள் நன்கு செயல்பட்டு வருவதாகவும் சீன அமைச்சர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பதாகவும் பிரதமர் லீ தெரிவித்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல் லாம் சிங்கப்பூரின் இளம் அமைச்சர்களை சீனாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் இதன் மூலம் சீன அமைச்சர்களுக்கு அவர்களைப் பற்றிய நல்ல ஒரு புரிதல் ஏற்படும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

