அமெரிக்கா-சீனா உறவு கசந்தால் ஆபத்து அதிகம்

அமெரிக்கா-சீனா உறவு கசந்தால் ஆபத்து அதிகம்

1 mins read
50712d2a-3b46-4632-886a-c67427ce23d4
-

உலகில் வர்த்தகப் போர் காரணமாக தீர்வை கூடும், வர்த்தகம் பாதிக்கும். ஆனால் அத்தகைய போர் காரணமாக அமெரிக்க - சீன உறவில் ஏற்படக்கூடிய பாதிப்பின் விளைவாக அதிக ஆபத்து ஏற் படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். இந்த சாத்தியத்தை மனதில் கொண்டு சிங்கப்பூரும் இந்த வட் டாரமும் இதைச் சமாளிக்க ஆயத் தமாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலக வர்த்தகப் போர் காரண மாக அமெரிக்க-சீன உறவு கசந் தால், அந்த இரண்டு நாடுகளுடன் நட்பு நாடுகளாக ஆக அல்லது இரண்டு நாடுகளுடன் நட்பு நாடு களாகத் தொடர கடுமையாக முயன்று வரும் ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளுக்குமே மிகவும் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று திரு லீ கூறினார்.

சீனாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்ட திரு லீ, அந்தப் பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் நேற்றுப் பேசினார். உலக வர்த்தகப் போர் காரணமாக வர்த்தகம், தீர்வை போன்றவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அநேகமாக ஏராளமான அளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மறைமுகமான தொடர் விளைவுகள் இந்த வட்டாரத்தில் உள்ள இதர நாடுகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திரு லீ கூறினார்.