சிங்கப்பூர் அரசியல் பற்றிய கருத் துகள், யோசனைகள், நாட்டை எப்படி நிர்வகித்து நடத்தவேண் டும் என்பதெல்லாம் சிங்கப்பூரர் கள் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். இதுவே அரசாங்கத்தின் நீண்ட நெடுநாளைய கோட்பாடாக இருந்துவருகிறது என்றும் இதையே அனைத்துத் தரப்பு சிங் கப்பூரர்களும் ஆதரிக்கிறார்கள் என்றும் அமைச்சர் செய்தியாளர் களிடம் நேற்று குறிப்பிட்டார்.
ஆரம்பகால பாலர்பருவ மேம் பாட்டு வாரியத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அரசியலில் நேரடியாகவோ மறை முகமாகவோ தலையிட வெளிநாட் டினர் முயலக்கூடாது என்றார். நியூ நரடிஃப் என்ற இணை யத்தளம், சிங்கப்பூர் விவகாரங்க ளில் தலையிடுவதற்காகத் தன்னை வெளிநாட்டினர் பயன் படுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுவதை அறிக்கை ஒன்றில் நேற்று மறுத்தது. சிங்கப்பூரில் அரசியல் காரி யத்தை அரங்கேற்றுவதற்காக இந்த இணையத்தளம் பயன்படுத் தப்படுவதாகக் கூறப்படுதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்தத் தளம் அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது.
நியூ நரடிஃப் இணையத் தளத்தை வரலாற்று வல்லுநரான தும் பிங் ஜின் என்பவரும் அப் போதைக்கு அப்போது செய்தியா ளராக வேலை பார்ப்பவரான கிறிஸ்டன் ஹான் என்பவரும் நடத்துகிறார்கள். அந்தத் தளத்துக்குச் செய்திச் சேவைகளை வழங்குவதற்காக ஓசியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அமைக்கப்பட்டது. அந் நிறுவனத்தைப் பதிய 'அக்ரா' எனப்படும் கணக்குப் பதிவியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் மறுத்துவிட்டது. புதிய நிறுவனத்தின் நோக்கம் அரசியல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது வெளிநாட்டு நிதி வளங்களுடன் தொடர்புக ளைக் கொண்டிருக்கிறது என் பதை அக்ரா சுட்டியது.

