ஒரு புதிய கான்கிரீட் கலப்புத் தொழில்நுட்பம் காரணமாக கட் டடங்கள் அதிக காலத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும் என்றும் கட்டுமானப் பணியில் விரயமாகும் மரக்கழிவுகளைப் பயனுள்ள வழி யில் பயன்படுத்தலாம் என்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிமெண்டுடன் மரக்கழிவு களிலிருந்துப் பெறப்படும் கரி யைக் கலந்து கான்கிரீட்டை உறு திப்படுத்தமுடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மரக்கரியில் சிறுசிறு துவாரங் கள் உண்டு. அதில் கரிமம் அதி கம். அது தண்ணீரை தக்கவைத் துக்கொள்ளும் திறனுடையது என்பதே இதற்கான காரணம் என்று அவர்கள் விளக்கினர். ஒரு நீர்த்தேக்கம்போல அல் லது ஒழுங்குப்படுத்தும் பொரு ளைப் போல அது செயல்படு கிறது. தண்ணீரை அது தேக்கி வைத்துக்கொள்ளும். இதனால் கான்கிரீட் கெட்டிப் படும் என்று இந்த ஆய்வுக் குழுவிற்குத் தலைமை வகிக்கும் இணைப் பேராசிரியர் குவா ஹார்ன் வெய் தெரிவித்தார். இந்தப் புதிய வகை கான்கிரீட் கலப்பு முறை காரணமாக தயா ரிக்கப்படும் கான்கிரீட், வழக்க மான முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டைவிட 20% அதிக எடையைத் தாங்கக்கூடியதாக இருக்கும் என்பது சோதனை மூலம் தெரியவந்திருப்பதாக ஆய் வாளர்கள் கூறுகிறார்கள்.
கான்கிரீட் கலவையைப் பலப் படுத்துவதால் கான்கிரீட் வார்ப்பு கள் எடை குறைந்ததாக, அதே நேரம் பலமிக்கதாக இருக்கும் என்றும் இதன் காரணமாக கான் கிரீட் பயனீடும் குறையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் 424,000 டன் மரக் கழிவுகள் உருவாயின. அவற்றில் 77% மட்டுமே மறுபுழக்கத்திற்குப் பயன் படுத்தப்பட்டதாக தெரியவந்து உள்ளது.
தங்களுடைய கண்டுபிடிப்புகளுடன் இடமிருந்து ஆய்வு உதவி யாளர் மணிகண்டன் ஜெயராஜ், முனைவர் கல்வி மாணவர் சௌரதீப் குப்தா, ஆய்வு உதவியாளர் சக்ரதா பெடபதி, இணைப் பேராசிரியர் குவா ஹார்ன் வெய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

