$365,000 கொள்ளை; 2 பேர் மீது குற்றச்சாட்டு

2 mins read
4a2342df-7a81-4e63-b05c-3c85e075500c
-

பிட்காயின் என்ற மின்னிலக்க நாணயத்தை வாங்குவதற்காக விற்பனையாளர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்த மலேசிய ஆடவரிடம் $365,000 தொகை கொள்ளை போனது. பாங் ஜுன் ஹாவ் என்ற அந்த ஆடவருக்கு வயது 20க்கு மேல் இருக்கும். அவர் பிட்காயின் வாங்குவ தற்காக சிங்கப்பூருக்கு வந்து சிங்கப்பூரரான ஒரு தரகருடன் தொடர்புகொண்டார். அந்தத் தரகரும் திரு பாங்கும் இந்த மாதம் 8ஆம் தேதி ஓர் ஆடவரைச் சந்தித்தனர். அந்த ஆடவர் தன்னிடம் பிட்காயின் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்திப்பு திரு பாங் தங்கியிருந்த மிடில் ரோடு ஹோட் டல் 81ல் இடம்பெற்றது. அங்கு திரு பாங்கும் அவருடைய தரகரும் வேறு ஒருவரையும் சந்தித்தனர். அந்த நபர் தன்னை ஒரு தரகர் என்று கூறிக்கொண்டார். திரு பாங்கிடம் பணம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு இரண்டு தரப்பினரும் வியாபாரத் திற்கு உடன்பட்டனர். பிறகு அந்த இரண்டு நபர் களும் திரு பாங்கையும் அவ ருடைய தரகரையும் தாக்கிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள்.

இது பற்றி அதே நாளன்று போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. சந்தேகப்பேர்வழிகள் இரு வரும் பின்னர் கைதுசெய்யப்பட்ட தாக நேற்று போலிஸ் அறிவித்தது. பிட்காயின் தரகர் என்று தன் னைக் கூறிக்கொண்ட முகம்மது அப்துல் ரஹ்மான் முகம்மது என் பவர் மீதும், அவருடைய நண்பர் சையது முக்தார் சையது யூசோப் என்பவர் மீதும், காயம் விளை வித்து கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இந்த இருவருக்கும் வயது 36. முகம்மது அப்துல் ரஹ்மான், இந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி கன்னமிட்டு திருடியதாகக் கூறப் படும் ஒரு குற்றச்சாட்டையும் எதிர் நோக்குகிறார். இவருடைய முன்னாள் மனை வியான யோகேஸ்வரி ராமன், 33, என்பவர் மீது, நேர்மையற்ற முறை யில் திருட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இந்தப் பொருட்களில் $45,800 மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரமும் உள்ளடங்கும். இதனிடையே, மலேசியரான திரு பாங்கிற்கு, அவர் கொண்டு வந்த ரொக்கம் எப்படிக் கிடைத்தது என்பது பற்றியும் தாங்கள் புலன் விசாரணை நடத்திவருவதாக போலிஸ் பேச்சாளர் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி வித்துள்ளது.

முகம்மது அப்துல் ரஹ்மான் பின் முகம்மது என்பவரும் அவருடைய நண்பரான சையது முக்தார் பின் சையது யூசோப் என்பவரும் $365,000 பணத்தை ஏப்ரல் 8ஆம் தேதி கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. படம்: சாவ் பாவ்