வர்த்தகங்களை துரிதப்படுத்தும் திட்டத்தில் ஏழு உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்பு

வர்த்தகங்களை துரிதப்படுத்தும் திட்டத்தில் ஏழு உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்பு

2 mins read

ஏழு சிறிய, நடுத்தர நிறுவனங்கள், மின்னிலக்க உருமாற்றத்தைச் செய்யவுள்ளன. வர்த்தகங்களைத் துரிதப்படுத்த உதவும் 'தி ஃபின் லேப்' அமைப்பின் திட்டத்தின் ஓர் அங்கமாக மின்னிலக்க உருமாற் றம் இடம்பெற்றுள்ளது. சிறிய, நடுத்தர நிறுவனங்க ளுக்கு அத்தகைய திட்டம் அமைக் கப் படுவது இதுவே முதல்முறை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 'சி.கே. டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்', 'இன்டர்நேஷனல் லேப்ஸ்', 'ஏஞ்சல் சூப்பர்மார்க் கெட்', 'சியாம் கோக்க நட்', 'ஸ்ட்ரெய்ட்ஸ் ஹெல்த்கேர்', 'லி மிங் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', 'ஏஸ்பெக் இன்டர்நேஷனல்' ஆகியவையே அந்த ஏழு நிறுவனங்கள். 'தி ஃபின்லேப்' வழங்கும் வளங்கள், வழிகாட்டுதல், பயிற்சி ஆகியவற்றை அந்த ஏழு நிறுவனங் களும் பயன்படுத்தி தங்க ளது மின்னிலக்கத் திறன் களை மேலும் விரிவுபடுத்திக்கொ ள்ளும். நிபுணர்கள், வழிகாட்டி கள் தொழில் நுட்பத்தலைவர்கள் ஆகி யோருடன் கட்டமைப்பைக் கொண் டுள்ளது 'தி ஃபின்லேப்' அமைப்பு.

யுனைடெட் ஓவர்சீஸ் வங்கிக் கும் அரசாங்கத்திற்குச் சொந்த மான 'எஸ்ஜி இனோ வேட்'டுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக 'தி ஃபின்லேப்' அமைப்பு உள்ளது. நான்கு மாதங்கள் நீடிக்கும் இந்தத் திட்டத்தின்கீழ், பங்கேற்கும் நிறுவனங்கள் 'தி ஃபின்லேப்' அமைப்பின் வழிகாட்டுதலைப் பெறும். தேவைக்கேற்ற தீர்வுகளை வழங்க முனையும் தொழில்நுட்ப நிறுவனங் கள், குறிப்பாக புதிய நிறுவனங்கள், திட்டத்தில் இருக் கும் நிறுவனங்க ளுக்கு அறிமுகம் செய்யப்படும். "வெற்றிகரமாக உருமாற விரும் பும் நிறுவனங்கள் முதலில் சரியான வர்த்தகத் திட்டத்தைக் கொண்டிருக்கவே ண்டும்," என்று யூஓபி வங்கியின் மின்னிலக்கமயப் பிரிவைச் சேர்ந்த ஜேனட் யாங் கூறினார். 'தி ஃபின்லேப்', மூன்றாவது முறையாக, தனது துரிதப்படுத்தும் திட்டத்தை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்டில் சிறிய, நடுத்தர நிறுவ னங்களுக்கான திட்டம் நிறைவடையும்.