சமூக நிகழ்ச்சி ஒன்றிலிருந்து பெறப்பட்ட பெயர்களையும் அடையாள அட்டை எண்களையும் பயன்படுத்தி அவர்களின் பெயரிலே உள்ளூர் தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து 41 கைபேசிகளை வாங்கி $30,000 வெள்ளி மோசடியை ரொன்னி லீ ஜியா ஜியே என்ற இளையர் செய்திருக்கிறார். 2014 டிசம்பருக்கும் கடந்தாண்டு மே மாதக்கும் இடையே, அவர் கையாண்ட நான்கு மோசடிச் செயல்களில் இதுவும் ஒன்று. $33,240 பணத்தை லீ மற்றவர்களிடம் ஏமாற்றிப் பெற்றார். தற்போது தேசிய சேவையாற்றியவரும் லீ, 16 மோசடிக் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
நவம்பர் 2014ஆம் ஆண்டில் நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றம் ஏற்பாடு செய்திருந்த துரிதநடை நிகழ்ச்சியில் லீ தொண்டூழியராகச் சேர்ந்ததாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் டியோ யூ சோ தெரிவித்தார். நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் வருகையைக் குறிப்பதற்காக அவர்களின் பெயர், அடையாள எண் கொண்டுள்ள பட்டியல் லீக்குக் கொடுக் கப்பட்டது. அந்த விவரங்களைப் பயன்படுத்தி லீ, சிங்டெல் இணையத்தளத்தில் கைபேசி வாங்குவதற்கான 49 விண் ணப்பங்களைச் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

