சமூக சேவையில் பாலர்கள்

சமூக சேவையில் பாலர்கள்

2 mins read
0d48dd09-9e82-4563-80e2-46e627680a5d
-

இம்மாதம் முதல், 670க்கு மேற்பட்ட பாலர் பள்ளி களைச் சேர்ந்த 39,000 சிறார் கள், ஆண்டு தோறும் நடைபெறும் தொண்டூழிய நிகழ்ச்சி களில் பங் கேற் பர். தொண்டூழியம் செய்வதையும் கனிவான வழிக ளில் சேவை புரிவதையும் திட்டம் ஊக்குவிக்கிறது. உணவு, பாரம்பரிய விளையாட் டுகள் ஆகியவற்றின்வழி பாலர் பள்ளி ஒன்று, தனது வட்டாரத்தின் முதியோருடன் உறவை வளர்த்துள் ளது. மற் றொரு பள்ளி, மறுபய னீட்டை ஊக்குவிக்கும் சிறு ஆடை அலங்காரப் போட்டி ஒன்றை நடத்தியது. 'ஸ்டார்ட் ஸ்மால் ட்ரீம் பிக்' என்ற அந்தத் திட்டம் முதலில் 2015ல் தொடங்கப்பட்டது. அப் போது பங்கேற்ற பாலர் பள்ளி மாணவர்களின் எண் ணிக்கையை விட தற்போது பங் கேற்கும் மாண வர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உள்ளது.

சமு தாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நேற்று ஜூரோங் வெஸ்டிலுள்ள என்டியுசி 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்ளியில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 'மற்றவர்களை இணைத்து பரா மரிப்போம்' என்பது 'இந்த ஆண்டு திட்டத்தின் கருப்பொருள் என்பதை ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. திட்டம் 2015ல் தொடங்கிய போது, 150 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 8,000 பிள்ளைகள் அதில் பங்கேற்றனர். அந்தப் பிள்ளைகள் $100,000க்கு மேல் வசூலித் தனர். 2016ஆம் ஆண்டில், 300 பள்ளி களைச் சேர்ந்த 20,000 சிறார்கள் $150,000க்கு அதிகமான நிதி யைக் குவித்தனர். கடந்த ஆண்டு, 550க்கும் மேற்பட்ட பள்ளிக ளைச் சேர்ந்த 34,000 பிள்ளை கள், $200,000க்கு மேல் திரட்டினர்.

ஜூரோங் வெஸ்டில் உள்ள என்டியுசி-யின் 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர்பள்ளியில் உள்ள சிறுவர்களுடன் விளையாடும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்