மின்ஸ்கூட்டர் மோதி சிறுமி காயம்

மின்ஸ்கூட்டர் மோதி சிறுமி காயம்

1 mins read
b722792c-fb49-476b-b905-a589132c527d
-

பாசிர் ரிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்திற்கு அருகே மின்ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற 24 வயது ஆடவர் ஒருவர், 11 வயது சிறுமி மீது மோதிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார். பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் இரவு 8.30 மணிக்கு கண்மூடித்தனமான செயல் மூலம் ஒருவருக்குக் காயம் விளைவிக்கப்பட்டதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று போலிஸ் கூறியது. சாலையோர நடைமேடையில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுமி, சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

பாசிர் ரிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்திற்கு அருகே 24 வயது ஆடவர் (இடது) மின்ஸ்கூட்டரை ஓட்டிவந்து 11 வயது சிறுமி மீது மோதிவிட்டார். படம்: ஃபேஸ்புக்/ ஸாம் ரிப்ஃஸாம்