மிதமாக, படிப்படியாக சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு உயர அனுமதி

2 mins read
940b9bf7-1b0d-4196-88d1-5b1936bd7751
-

சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மிதமாக, படிப்படியாக உயர அனு மதித்து இருக்கிறது. ஆறாண்டு காலத்தில் முதன்முதலாக ஆணை யம் தன்னுடைய நாணயக் கொள் கையை இறுக்கி இருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கொஞ்சம் குறைந்தது. நேற்று முற்பகல் 10 மணிக்கு ஒரு டாலருக்கு S$1.3129 ஆக மதிப்பு இருந்தது. இந்த மதிப்பு வியாழக் கிழமையன்று ஒரு டாலருக்கு S$1.3126 என்ற நிலையில் விலை போனது. நேற்று முற்பகல் 11 மணி வாக்கில் ஒரு டாலருக்கு S$1.3119 என்ற அளவுக்கு சிங்கப்பூர் வெள்ளி பலமடைந்தது.

பொருளியல் பலமடைகிறது. தொழிலாளர் புள்ளிவிவரங்கள் மேம்பட்டு வருகின்றன. பண வீக்கம் உயர்கிறது. இந்தச் சூழலில் ஆணையம் இத்தகைய முடிவை எடுத்திருப்பது வியப் பளிப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆணையம், முக்கியமான வர்த்தகப் பங்காளி நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக தன் பரிவர்த்தனை விகிதத்தை நிர் வகித்து வருகிறது. சிங்கப்பூர் பொருளியலில் உற்பத்தித் துறை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 10.1% வளர்ச்சி கண்டு முக்கிய வளர்ச்சித் துறை யாகத் திகழ்கிறது. இந்த வளர்ச்சி, 2017 கடைசி காலாண்டில் 4.8% ஆக இருந்தது. ஆணையம், ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஏப்ரல் மாதத்திலும் அக்டோபர் மாதத்திலும் தன் னுடைய நாணயக் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது.

அதன்படி இந்த ஏப்ரல் மாத நாணயக் கொள்கை அறிக்கையை நேற்று ஆணையம் வெளியிட்டது. 2017 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூர் பொருளியல் மேம்பட்டு வந்திருக்கிறது. அது இந்த ஆண்டிலும் சீரான வேகத்தில் மேம்படும். இருந்தாலும் அமெரிக்கா-சீனா நாடுகளுக் கிடையில் இடம்பெறக்கூடிய வர்த் தகப் பிரச்சினைகள் முற்றினால் உலக வர்த்தகத்தில் அதனால் ஏற்படக்கூடிய தொடர் விளைவுகள் கணிசமாக இருக்கும் என்று அறிக்கையில் ஆணையம் குறிப் பிட்டுள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆணையம் தன் நாணயக் கொள்கையை திருத்தி அமைத்துள்ளது.