2018 முதல் காலாண்டில் பொருளியல் 4.3% வளர்ச்சி

2018 முதல் காலாண்டில் பொருளியல் 4.3% வளர்ச்சி

1 mins read
63d92dc9-2223-4886-9299-48e87a95fa1e
-

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் 4.3% வளர்ந்து இருக்கிறது. உற்பத்தித்துறை வளர்ச்சி பெரிதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்று வர்த்தக தொழில் அமைச்சின் மதிப்பீடுகள் தெரிவிக்கின் றன. ஆண்டுக்காண்டு அடிப்படையிலான இந்த வளர்ச்சி, பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பை ஒத்திருக்கிறது. 2017 கடைசிக் காலாண்டில் பொருளியல் 3.6% விரிவடைந்தது. 2018 மூன்று மாதங்களில் உற்பத்தித் துறை 10.1% வளர்ச்சி கண்டுள்ளது. பொருளியலில் மூன்றில் இரண்டு பங்கிற்குப் பொறுப்பு வகிக்கும் சேவைத் துறை, ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3.8% கூடியது. கட்டுமானத் துறை தொடர்ந்து பலவீனமாகவே இருந் தது. இது, முதல் மூன்று மாதத்தில் 4.4% சுருங்கியது.