போலிக் கடிகாரங்கள் சிக்கின

போலிக் கடிகாரங்கள் சிக்கின

1 mins read
b6b66b29-2d69-4f0e-84a8-b5ef1d93bec9
-

சாங்கி விமான நிலையம் வழியாக 120க்கும் அதிக போலிக் கடிகாரங்களைக் கடத்திவர முயன்ற 52 வயது ஆடவர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரி களிடம் சிக்கினார். சாங்கி விமானநிலையம் முனையம் 4ல் சரக்குப் பைகளைச் சோதனையிட்டபோது அந்த ஆடவரின் பெட்டியில் 126 போலி கடிகாரங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக இந்த ஆணையம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. அந்தக் கடிகாரங்களின் மதிப்பு $1,350. இதன் தொடர்பில் பிலப்பீன்சைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் போலி சிடம் அனுப்பப்பட்டு இருக்கிறார் என்றும் புலன்விசாரணை தொடர்வதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.