3 நீண்டகால அமைச்சர்கள் பதவி விலகக்கூடும்

3 நீண்டகால அமைச்சர்கள் பதவி விலகக்கூடும்

2 mins read

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ள நாடாளுமன்றம் அடுத்த மாதம் மே 7ஆம் தேதி மீண்டும் கூடுவதற்கு முன்னர் அமைச்சர் அவையில் மாற்றங்கள் அறிவிக்கப் படும் என்று முன்னர் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த மாற்றங்கள் இம்மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை அறிவிக் கப்படும்போது முக்கிய மாற்றங்க ளில் ஒன்றாக மூன்று நீண்டகால அமைச்சர்கள் பதவி விலகக் கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. வர்த்தக, தொழில் அமைச்சர், 64 வயது லிம் ஹங் கியாங், மனிதவள அமைச்சர் 63 வயது லிம் சுவீ சே, தகவல், தொடர்பு அமைச்சர் 62 வயது டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் ஆகியோர் தங்களின் பொறுப்புகளிலிருந்து விலகக்கூடும் என்று நம்பப்படு கிறது. அவர்கள் மூவருக்கும் மொத்தம் 66 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது.

புதிய பொறுப்புகளில் இளைய தலைமுறை அமைச்சர்கள் தங்க ளின் அனுபவங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும் பெரிய அளவி லான தலைமைத்துவ பொறுப்பு களை ஏற்றுகொள்வதற்கு அவர் களைத் தயார்படுத்தவும் அமைச் சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த மூவரின் பதவி விலகல் நான்காம் தலைமுறை அமைச்சர் கள் புதிய அமைச்சரவைகளில் அமர்த்தப்படுவதற்கு வழிசெய்யும். அடுத்த பிரதமராக ஹெங் சுவீ கியட், சான் சுன் சிங், ஓங் யி காங் ஆகியோரில் ஒருவர் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகி றது. இதுவரை அவர்கள் பணி யாற்றி உள்ள அமைச்சரவைகள் இல்லாமல் பொருளாதாரம், தற் காப்பு, சமூகம் என அனைத்திலும் அனுபவம் பெற வாய்ப்பு வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.