மக்களால் அதிகம் மதிக்கப்படும் ஒபாமா

1 mins read

சிங்கப்பூரில் அதிகம் மதிக்கப்படும் நபராக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அதிகம் விரும்பப்படும் பெண்ணாக அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் உள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான 'யூகவ்' 35 நாடுகளில் 37,000 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன. பிரதமர் லீ சியன் லூங் பட்டியலின் எட்டாவது இடத்தில் உள்ளார்.