பிரிட்டனில் கடந்த மாதம் 4ஆம் தேதி முன்னாள் ரஷ்ய உளவாளி மீதும் அவரது மகள் மீதும் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்கள் பயன்பாட்டு கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையின்படி கடுமையான விளைவை ஏற்படுத்தும் ரசாயனம் தக்குதலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சு கூறியது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட தந்தை திரு செர்கை ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ரசாயன தாக்குதலுக்கு கண்டனம்
15 Apr 2018 - 6:00 am
1 mins read
