கொள்ளை; இருவர் மீது குற்றச்சாட்டு

கொள்ளை; இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

சிராங்கூன் சாலை அருகிலுள்ள ரோவல் ரோட்டில் சென்ற ஆண்டு கடைவீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கு தப்பிச் சென்ற இரு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 33 வயது தவா குமரன் ராமமுட்டி, 30 வயது ஷங்கர் மகாலிங்கம் ஆகிய இருவர் மீதும் கும்பல் கொள்ளை செய்த தலா ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கும் 3.08 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் $300,000 ரொக்கத் தொகை கொள்ளையடிக்கப்பட்டது என்று போலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.