தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் சிங்கப்பூர் வந்தது

1 mins read
1637c817-c49b-4b7e-8038-3ccf228e3029
-

உலகிலே ஆகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் USNS மர்சி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிங்கப்பூர் கடல் நீரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பத்து மாடிக் கட்டடத்தின் உயரத்தையும் சுமார் மூன்று காற்பந்துத் திடலின் அகலத் தையும் கொண்ட இந்தக் கப்பலில் 1,000 மருத்துவப் படுக்கைகள் உள்ளன. தென்கிழக்காசியாவில் மனிதாபி மானப் பணிகளுக்காக இந்தக் கப்பல் தற்போது சாங்கி கடற்படைத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2004ல் ஆசியாவைச் சுனாமி உலுக்கியெடுத்தபோது இந்தக் கப்பல் முதன்முதலாக இவ்வட்டாரத்திற்கு வந்தது. சான்டியேகோ நகரைச் சேர்ந்த இக்கப்பல், அப்போது முதல் ஆசிய நாடுகள் பலவற்றுக்குச் சென்று மனிதாபிமான உதவி, பேரிடர் நிர்வாகம் போன்றவற்றுக்கு அந்நாடுகளைத் தயார்ப்படுத்த உதவி வருகிறது. பிப்ரவரியின் பிற்பகுதியில் அமெரிக்காலிருந்து கிளம்பிய கப்பல், சிங்கப்பூரில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வந்துள்ளது. அதன் பிறகு, மலேசியா, இலங்கை வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு இக்கப்பல் செல்லும்.

பத்து மாடி கொண்ட இக்கப்பலில் 1,000 படுக் கைகள் உள் ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்