வி. அருள் ஓஸ்வின் ஒருவர் அறியாமலேயே அவருடைய சொத்தை அபகரிக்க முடியும் என் னும் திடுக்கிடும் தகவல் சென்ற சனிக்கிழமை பிக்சல் ஸ்டூடியோ வில் நடைபெற்ற மூன்று மணிநேர தொழில்நுட்பப் பயிலரங்கில் தெரி விக்கப்பட்டது. 'மின்னியல் தமிழ் - புத்தாக்க அணுகுமுறை' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கை 'பிக்சி பிட் பிரைவேட் லிமிடெட்' நிறு வனத்தின் புத்தாக்க நிறுவனர் திரு எஸ்.குணசேகரன் ஏற்பாடு செய்தார்.
தமிழைத் தொழில்நுட்ப ரீதி யாக எப்படி அடுத்த தலைமுறையி னருக்குக் கொண்டு செல்வது என்பதை வல்லுநர்களின் படைப்பு கள் மூலமாகவும் சுவாரசியமான இணைய விளையாட்டுகள் மூல மாகவும் இப்பயிலரங்கு ஆராய்ந் தது. திரு குணசேகரன் மெய்நிகர் காணொளிகளைத் தயாரிப்பதன் உத்திகளான இருவழி ஒலி அமைப்பு, ஒளியூட்டும் திட்டம் போன்றவற்றை நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த கிட்டத்தட்ட 50 பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூரில் உள்ள இலங்கை துணைத் தூதர் திரு அமீர் அஜ்வாட் தமிழின் தொன்மை யையும் நீடித்து நிலைக்கத்தக்க தன்மையையும் பறைசாற்றினார்.
கலந்துரை யாடலில் பங்கேற்ற (இடமிருந்து) திரு ரவிசந்தரன் சோமு, திரு அமீர் அஜ்வாட், டாக்டர் டி சந்துரு, திரு கணேஷ் நாராயணன், திரு குணசேகரன். படம்: ராம்குமார், பிக்சிபிட்

