சிங்கப்பூரின் தலைமை பல் மருத்துவராக, கடந்த 12 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்த 58 வயது இணை பேராசிரியர் பேட்ரிக் செங், இம்மாத இறுதியில் தமது பதவியிலிருந்து விலகுவார். அவருக்குப் பதிலாக கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் பல் மருத்துவத் துறை யின் தலைவரான 42 வயது டாக்டர் சிங் சாய் கியட், அந்தப் பதவியை மே 1ஆம் தேதி ஏற்றுக்கொள்வார்.
பேராசிரியர் செங், தமது பதவிக்காலத்தில் பல்மருத்துவ நிபுணத்துவ அங்கீகார வாரியம், பல் மருத்துவர்களுக்கான பதிவு, விதிமுறை அமைப்பு ஆகியவற்றைத் தொடக்கி வைத்திருக்கிறார். அத்துடன் பல் மருத்துவர்கள் தங்கள் நிபுணத்துவக் கல்வியைத் தொடர்வதை அவர் கட்டாயமாக்கினார். பதவி விலகிய பின்னர் பேராசிரியர் செங், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் முழுநேர பல் மருத்துவப் பணிக்கு மீண்டும் திரும்புவார். தலைமை பல் மருத்துவர் பதவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அங்கீகார வாரிய பதி வாளர் பதவியிலிருந்தும் அவர் விலகுவார். டாக்டர் சிங், அடுத்ததாக அந்த இரண்டு பதவிகளையும் ஏற்பார்.

